டக் அவுட்டான சச்சின் மகன்!

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (18:24 IST)
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் மகன் அர்ஜூன் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி உள்ளார்.

 
19 வயது உட்பட்டோருக்கான இந்திய அணி இலங்கையில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெறும் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது.
 
இதில் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் மகன் அர்ஜூன் அறிமுகமானார். டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 244 ரன்கள் குவித்தது.
 
அர்ஜூன் தனது முதல் விக்கெட்டை முதல் போட்டியிலே வீழ்த்தி அசத்தினார். 11 ஓவர்கள் வீசிய அர்ஜூன் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி மூன்று நாளான இன்று 589 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
 
8வது விக்கேட்டுக்கு களமிறங்கிய அர்ஜூன் 11 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். சச்சின் மகள் முதல் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறியது சற்று வருத்தமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்