அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டது ஏன்? ஜெயவர்தனே விளக்கம்!

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (08:15 IST)
அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே விளக்கம். 

 
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் ஏலத்தின் கடைசி நபராக அர்ஜூன் தெண்டுல்கர் ஏலம் விடப்பட்டார். அவரை அடிப்படை விலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.20 லட்சத்திற்கு வாங்கியது. இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. 
 
எனவே, இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியிருப்பதாவது, நாங்கள் முற்றிலும் திறன் அடிப்படையில் மட்டுமே இதை அணுகினோம். ஏனெனில், சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கப்போகிறது. அதிர்ஷ்டவசமாக அர்ஜுன் பந்துவீச்சாளாராக உள்ளார்.  
 
எனவே அர்ஜுனைப் போல பந்து வீச முடிந்தால் சச்சின் மிகவும் பெருமைப்படுவார்.  அர்ஜுனுக்கு இது ஒரு கற்றல் நடைமுறையாகவே  இருக்கப்போகிறது என நான் நினைக்கிறேன். அவர் இளம் வீரர் என்பதால் தன்னை மேம்படுத்திக்கொள்ள முடியும். எனவே, அவருக்கு நாம் உரிய நேரம் கொடுக்க வேண்டும். அவருக்கு அதிகமான அழுத்தங்களை கொடுக்கக் கூடாது என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்