ஒரு ஓவரில் 7 பந்துகள் வீச்சு: ஐபிஎல்லில் முறைகேடு ...

புதன், 11 ஏப்ரல் 2018 (18:01 IST)
ஹைதராபாத்தில் கடந்த திங்கள்கிழமை நடந்த போட்டியில் முறைகேடு நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் இதை பற்றி பெரிதாக யாரும் கண்டுக்கொள்வதாய் தெரியவில்லை. 
 
கடந்த திங்கள்கிழமை, ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.  
 
இந்த போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீசியதில், 12 வது ஓவரில்  7 பந்துகள் வீசப்பட்டுள்ளன. இந்த ஓவரில் ஒரு வைய்டு, நோபால் கூட வீசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
களத்தில் இருக்கும் நடுவர் இதை தடுத்திருக்க வேண்டும் அல்லது லெக் அம்பயர் கவனத்திருக்க வேண்டும். ஆனால், இதை எதையுமே யாரும் செய்யவில்லை. 
 
கிரிக்கெட் விதிமுறைப்படி ஒரு ஓவருக்கு மேல் கூடுதலாக ஒரு பந்துவீசுவது குற்றமாகும். இது குறித்து இதுவரை எந்த புகாரும் கூறப்படவில்லை. ஐபிஎல், பிசிசிஐ அமைப்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்