19 பந்துகளில் அரைசதம்: பிரித்து மேய்ந்த சாம்சன்!

செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (20:21 IST)
19 பந்துகளில் அரைசதம்: பிரித்து மேய்ந்த சாம்சன்!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது 
 
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 6 ரன்களில் அவுட் ஆனாலும் அதன் பின் களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக அடித்து ஆடினார். அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்தது சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. குறிப்பாக அவர் பியூஸ் சாவ்லா மற்றும் தீபக் சஹர் பந்துகளை அடித்து அடித்து நொறுக்கி சிக்ஸர்களாக விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்வரை ராஜஸ்தான் அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 200ஐ தாண்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்