இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணி முதல் இன்னின்ங்சில் 9 விக்கெட்டுக்களை இழந்து 469 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய மே.இ.தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனால் இங்கிலாந்து அணி 182 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்தது. இந்த நிலையில் சற்றுமுன் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. இதனால் மே.இ.தீவுகள் அணிக்கு 312 வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை மே.இ.தீவுகள் அணி எட்டுமா? அல்லது அதற்குள் விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்