இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைகிறது! – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

திங்கள், 20 ஜூலை 2020 (12:28 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 11 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் இறப்பு விகிதம் குறைந்து வருவதாய் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதலாக இந்தியா முழுவதும் பரவிய கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்தன தற்போது கர்நாடகா மற்றும் உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

இதுவரை 11,18,043 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 27,497 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ள தகவலில் சமீப காலமாக கொரோனா இறப்பு சதவீதம் குறைந்து வருவதாகவும் தற்போது முதன்முறையாக கொரோனா இறப்பு எண்ணிக்கை 2.5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வரும் காலங்களில் இறப்பு எண்ணிக்கை மேலும் குறைந்து, குணமானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்