211 என்ற இமாலய இலக்கை கொடுத்த லக்னோ: கொல்கத்தா வெற்றி பெறுமா?

புதன், 18 மே 2022 (21:29 IST)
211 என்ற இமாலய இலக்கை கொடுத்த லக்னோ: கொல்கத்தா வெற்றி பெறுமா?
ஐபிஎல் தொடரில் இன்று 66 ஆவது லீக் போட்டி லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது
 
இன்றைய போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் எடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய குவின்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவருமே 20 ஓவர்கள் விளையாடி உள்ளனர் 
 
குவின்டன் டி காக் 140 ரன்கள் ராகுல் 68 ரன்கள் எடுத்துளனர். இந்தநிலையில் 211 என்ற இலக்கை நோக்கி தற்போது கொல்கத்தா அணியில் விளையாடி வருகின்றனர் 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்