இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதனை அடுத்து ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. அதில்,ஷர்மா 9 ரன்களும், கார்க் 42 ரன்களும், திரிப்பாதி 76 ரன்களும்,பூரன் 38 ரன்களும்,வில்லியம்சன் 8 ரன்களும்,, சுந்தர்9 ரன்களும் அடித்தனர். எனவே, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதையடுத்துக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் சர்மா 48 ரன்களும், டேவிட் 46ரன் களும், இஷான் கிஷன் 43ரன் களும் அடித்தனர், 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 190 ரன் கள் மட்டுமே எடுத்துத் தோற்றது.