நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை தலைமை தாங்கி வருகிறார் கேன் வில்லியம்சன். அந்த அணி இந்த ஆண்டு ப்ளே ஆஃப்க்கு செல்வது நடக்காத காரியம் ஆகிவிட்டது. இந்நிலையில் மீதமுள்ள தொடரில் இருந்து விலகி அவர் நியுசிலாந்துக்கு பறந்துள்ளார். அவர் குடும்பத்தில் நடந்த மகிழ்ச்சியான காரியமே இதற்குக் காரணம் என சொலப்படுகிறது.
இது சம்மந்தமாக வெளியான தகவலில் “எங்கள் கேப்டன் கேன் வில்லியம்சன், தனது குடும்பத்தில் புதுவரவுக்காக மீண்டும் நியூசிலாந்துக்கு பறக்கிறார். அவரின் மனைவிக்கும் அவருக்கும் எங்கள் அணியின் சார்பாக வாழ்த்துகள்” என்று SRH அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விரைவில் கேன் வில்லியம்சனுக்கு குழந்தை பிறக்க உள்ளதால் அவர் நாடு திரும்பியுள்ளார்.