குறைந்த ரன்களில் ஆஸ்திரேலியாவை சுருட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்; இலக்கு எவ்வளவு?

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (17:08 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியதுஇறங்கியது. 
 
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான மார்ஷ் மிக அபாரமாக விளையாடி 81 ரன்கள் எடுத்தபோதிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அந்த அணி 35.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 
 
ஷமி மற்றும் சிராஜ்  மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர். ஜடேஜா இரண்டு விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஒரு விக்கட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
 
இந்த நிலையில் 189 என்ற இலக்கை நோக்கி இந்தியா அணி இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்