ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டாரா அஸ்வின்.. அவரே சொல்லும் உண்மை..!

Siva

வியாழன், 9 அக்டோபர் 2025 (14:15 IST)
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது ஓய்வு முடிவு குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 
 
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் பாதியில் தான் ஓய்வுபெற்றது தனிப்பட்ட முடிவு என்றும், யாரும் தன்னை விலக சொல்லி கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
 
தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், தான் முடிவெடுப்பதற்கு முன்பே, அப்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் ஒருமுறை யோசிக்குமாறு கூறியதாகவும், ஆனால் இது ஒரு தனிநபர் முடிவு என்பதால் தான் உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
 
மேலும், ஆடும் லெவனில் இல்லாவிட்டால் அணியுடன் வெறுமனே பயணியாக இருக்க விரும்பவில்லை என்பதாலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி குறித்து பேசிய அஸ்வின், இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், அவர்களின் அனுபவத்தை விலைக்கு வாங்க முடியாது என்றார். 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்