2020ஆம் ஆண்டில் 100 பால் கிரிக்கெட் போட்டி அறிமுகம்!

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (17:40 IST)
2020ஆம் ஆண்டில் 100 பால் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்ய உள்ளது. 

 
கிரிக்கெட் போட்டியின் அளவு குறைந்துக் கொண்டே வருகிறது. குறுகிய கிரிக்கெட் போட்டியைதான் ரசிகர்கள் பெரும்பாலும் ரசிகிறார்கள். ஒருநாள் போட்டியை விட டி20 போட்டி மீதுதான் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். 
 
டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்கள் குறைந்துக்கொண்டே வருகிறார்கள். இதனால் அண்மையில் 5 நாட்கள் விளையாடக்கூடிய டெஸ்ட் போட்டியை 4 நாட்கள் விளையாடக்கூடிய டெஸ்ட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டடு குறிப்பிடத்தக்கது.
 
இதேபோல் தற்போது டி20 போட்டியை விட குறைவான பந்துகளை கொண்ட 100 பால் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதை 2020ஆம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்ய உள்ளது. 
 
15 ஓவர்கள் வரை 6 பந்துகள் ஒரு ஓவருக்கு வீசப்ப்படும் என்றும், கடைசி ஓவரில் மட்டும் 10 பந்துகள் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 100 பால் கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்