செல்வத்தை அள்ளித்தரும் இந்த குபேரன் யார்?

Webdunia
சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் குபேரனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவரவர் விதிப்பயனுக்கு ஏற்ப கொடுத்து வர கட்டளையிட்டார். மகாவிஷ்ணுவின் மனைவி யான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை பெற்றாள்.

தனம், தானியம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி  பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப்பிள்ளையாக நியமித்துக் கொண்டார்  குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர்.
 
குபேரன் அருளாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டினத்தை விசுவகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி,  மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான். இவரது வலதுபுறத்தில் சங்க நிதியும், இடது புறத்தில் பத்ம  நிதியும் அமர்ந்து இருப்பார்கள். சங்க நிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பார். இவரது கை வரத  முத்திரை தாங்கி இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்.
 
குபேரனின் தகப்பனார் ஒரு ரிஷி. தாயாரோ அசுர குலத்தைச் சேர்ந்தவர். குபேரன் ராவணனுக்கு சகோதர முறை. அந்தச் சகோதரனாலேயே இவரது நகரம்  கைப்பற்றப்பட்டு விட லட்சுமியின் அருளால் தனி நகரத்தை ஏற்படுத்தி கொண்டார். இவர் தவம் செய்து அந்தத் தவ பலத்தினால் சங்கநிதி, பதுமநிதி போன்ற  நவநிதிகளுக்கும் அதிபதியானார்.
 
குபேரனை ஒருவர் மனமுருகிப் பிரார்த்தித்தால், குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும். அதாவது லாட்டரி, அறக்கட்டளைகளை ஏற்படுத்தி அடையும் சுய லாபம் போன்றவையே அச்செல்வங்கள். திடீரென இந்த செல்வம் எப்படி ஒருவருக்கு வந்ததோ அதைப் போன்றே  விரைவில் மறைந்துவிடவும் செய்யும்.
 
எனவே இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி வழங்குதல்,  ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற பொது காரியங்களில்செலவழிக்க வேண்டும். மூன்று தலை முறைகள் வரையிலாவது அந்த செல்வம் கீழிறிங்காமல் நிலைத்திருக்கும்.
 
குபேர லிங்கம் படத்தைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பண வருமானம் குறையாது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்