வீட்டில் விளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது என்று சொல்ல என்ன காரணம்?

வீட்டில் விளக்கேற்றிய பின் தலை வாரினால் மகாலட்சுமி வீட்டில் தங்கமாட்டாள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. மாலை நேரம் வழிபாட்டுக்குரிய நேரம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம்.

வீட்டில் மகாலட்சுமி என்றும் நிலைத்திருக்க விளக்கு ஏற்றுதல் மிகவும் அவசியம். அதாவது, பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றுவது மிகவும் நல்லது. சூரிய உதயத்துக்கு ஒரு நாழிகை முன்னாலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு ஒரு நாழிகை முன்னாலும் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) விளக்கு ஏற்ற வேண்டும்.

அந்த சமயத்தில்  பெண்கள் கூந்தலை விரித்தபடி நிற்பது நல்லதல்ல. எனவே விளக்கு வைப்பதற்கு முன்பாக மாலை 5.30 மணிக்குள் பெண்கள்  தலைவாரி, பூ முடித்து, நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது சிறப்பைத்தரும் என கூறுகின்றனர் சான்றோர்கள்.
 
திருமகள் வீட்டில் வாசம் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் தினமும் மாலையில் வீட்டின் பூஜை அறைலும், வாசலிலும்  நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். தீபம் ஏற்றும் போது கொல்லைபுற கதவை மூடிவிட வேண்டும். அல்லது பின்புற கதவு  இருந்தால் அதை மூடி விட வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்