வளர்பிறை அஷ்டமி நாளில் எந்த தெய்வத்தினை வழிபாடு செய்யலாம்...?

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (18:32 IST)
எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் பைரவரை வழிபட சிறந்த தினமாக  அஷ்டமி தினம் கருதப்படுகிறது.


வளர்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்க அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்.

சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படு வது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக் கும் வழியமைத்து ஆசிர்வதிப்பார்.

வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீகாலபைரவர் அல்லது சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடலாம், வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் பணிபுரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும்.

வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து ஆறு வாரங்கள் 48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை சொர்ணாகர்ஷண பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்கவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்