பார்ஷ்வா ஏகாதசி எவ்வாறு உருவானது புராணக்கதை என்ன...?

Webdunia
பார்ஷ்வா ஏகாதசி வாமன ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இது பகவான் விஷ்ணு வின் ஐந்தாவது அவதாரமான வாமன அவதா ரத்தை குறிக்கிறது.


இந்த கதையை  பிரம்ம வைவத்ர புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் தருமருக்கு எடுத்து சொல்கிறார். த்ரேதாயுகத்தில் மஹாபலி என்ற அசுர அரசன் இருந்தான். அசுர குலத்தில் பிறந்தாலும் சிறந்த விஷ்ணு பக்தன். நன்மைகள் பல புரிந்தவன் யாகங்களும் தானங்களும்  செய்வதில் வல்ல வன். எனினும் அசுர குலத்தில் பிறந்ததால் அழிவை சந்திக்க  வேண்டியதாயிற்று.
 
ஒரு சமயம் மகாபலி இந்திரனோடு சண்டை செய்து  அவரிடமிருந்து அவரது ராஜ்யத்தை பறித்துக் கொண்டார். இந்திரன் ஏனைய தேவர்கள் முனிவர்களுடன் சென்று திருமாலி டம் முறையிட அவரும் வாமன அவதாரம் எடுத்தார்.
 
மகாபலி செய்யும் யாகத்தில் கலந்து கொண் டார் வாமனராம் அந்த தெய்வீக  பிராமணர். குழந்தையை போல் உருவில் சிறியவராக தோற்றமளித்த வாமனரிடம் அவர் விரும்பும் தானம் என்னவென்று மகாபலி அரசன் வினவினான்.
 
மூன்றடி மண் கேட்டார் வாமனர். வந்திருப்பது மகாவிஷ்ணுவென உணர்ந்த பலியின் குரு சுக்ராச்சாரியார் பலி சக்ரவர்த்தியை அந்த தானமளிப்பதில் இருந்து தடுத்தார். பலியோ வந்திருப்பவரின் எண்ணம் அறிந்தும் தானம் அளிக்க தயார் ஆனான். என்னே ஆச்சர்யம்! மள மளவென வளர்ந்தது வாமனனின் உருவம்.
 
ஓரடியால் இப்புவி அளந்தார் வாமன அவதார மெடுத்த மகாவிஷ்ணு. அடுத்த அடியில் ஆகா யம் அளந்தார். மூன்றாவது அடி அளக்க இடம் இல்லை, வந்திருக்கும் இறைவன் முன் வண ங்கி  தனது  தலையை அவரது பாதத்தின் கீழ் வைத்தான் மகாபலி. அப்படியே அவனை பாதாள லோகத்திற்கு பாதம் கொண்டு தள்ளினார் எம்பெருமான்.
 
மகாபலியின் பணிவை மெச்சி அவனை அமர ராக்கினார் மகா பிரபு. அவனது இல்லத்தில் தாம் என்றும் வசிப்பதாக வாக்கு கொடுத்தார். அதற்கு ஏற்ற மாதிரி அவரது  உருவ பொம்மை பார்ஷ்வா பரிவர்த்தினி ஏகாதசி அன்றிலிரு ந்து மகாபலி மாளிகையில் வணங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்