எமனிடம் போராடி தனது கணவனின் உயிரை மீட்ட சாவித்ரி

Webdunia
பெண்கள் தீர்க்க சுமங்கலி வரம் பெறவும், கன்னியர்கள் நல்ல கணவன்மார்களை அடையவும் காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் துவங்கும் வேளையில் பெண்கள் இந்த காரடையான் நோன்பை கடைப்பிடிப்பார்கள். இந்த நோன்பை சாவித்ரி விரதம் என்றும் அழைப்பார்கள்.
சாவித்ரி விரதத்துக்கு காரணம்?
 
சாவித்ரி தனது கணவர் சத்தியவானின் உயிரை பறித்துச் சென்ற எமதர்மனை மறித்து தான் பதிவிரதை என்பது உண்மையானால் தனது கணவனின் உயிரை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டாள். இறப்புக்கு பின்னர் யாருக்கும் வாழ்க்கை இல்லை என மறுத்த எமதர்மர், இதை தவிர வேறு எந்த வரம் கேட்டாலும்  தருவதாக கூறினார். 
 
சம்யோஜிதமாக யோசித்த சாவித்ரி பார்வையற்ற தனது மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும் என்றும் தனக்கு 100 குழந்தைகள் வேண்டும் என்றும் வரம் கேட்டாள். சற்றும் யோசிக்காமல் எமதர்மரும் வரம் அருளினார்.
 
100 குழந்தைகள் வேண்டும் என்றால், அதற்கு தனது கணவர் உயிருடன் இருக்க வேண்டும். ஆகவே தனது கணவரின் உயிரை திருப்பி கொடுங்கள் என சாவித்ரி கேட்க, அவளது அறிவுத் திறனை வியந்து சத்தியவானின் உயிரை அங்கேயே விட்டுச் சென்றார். எமனிடம் போராடி சாவித்ரி தனது கணவனின் உயிரை மீட்ட தினம் சாவித்ரி விரதம் என்றும் காரடையான் நோன்பு என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்