பாவங்களை போக்கும் திருவண்ணாமலை கிரிவலம்

சித்தர்கள் கூற்றுப்படி, 'கிரிவலம்' என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று. பக்தர்கள் மலை வலம் வரும் நாளில்,  நீராடி,  தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறைசிந்தனையோடு மட்டுமே  செல்லவேண்டும்.
கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு அன்னமிடுவது சிறப்பாகும். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம். அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், நமது பாவப்பிணிகள் அகலும். இவ்வாறாக கிரிவலம் செய்தால்தான் முழுமையான பலன் கிடைக்குமென சித்தர்கள் கூறிச்சென்றுள்ளனர்.
 
அருணாசலத்தை வலம் வரவேண்டும் என்ற நினைவோடு ஓர் அடி எடுத்துவைத்தால், யாகம் செய்யும் பலன் கிடைக்கும். இரண்டாம் அடி எடுத்து வைத்தால், சர்வ தீர்த்தமாடிய பலன் கிடைக்கும். மூன்றாம் அடியில் மகத்தான தானம் செய்த பலன் கிடைக்கும்.
கிரிவலம் வந்தால் பாவங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் பாவம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தையும் நமக்குத் தோற்றுவித்துவிடும். வயதானவர்களுக்கும் உடல் நலிவுற்றவர்களுக்கும், வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். அண்ணாமலையை  தொழுது கிரிவலம் வந்தால், மது, மாது, சூது, கொலை, களவு போன்ற ஐந்து பாதகங்கள் தொலையும் என்று புராணங்கள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்