முருகனுக்கு மனைவியர் இரண்டு: இவை உணர்த்தும் தத்துவம் என்ன...?

Webdunia
ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ் கலாச்சாரம். ஆனால் அந்த மொழியின் கடவுளுக்கோ இரணடு மனைவிகள் என்று சிலர் கேலி செய்வதுண்டு. ஆனால்  உண்மையில் முர்கனுக்கு இரண்டு மனைவிகள் உண்டா என்றால் இல்லை. இதை சற்று நுணுக்கமாக ஆராய வேண்டும்.
ஒரு மனிதனின் தலையில் இருந்து கால்வரை உல்ள ஒற்றை உறுப்புக்கள் இவையே.
 
நெற்றி (பிரம்மந்திரா), தொண்டைக் குழி (ஆங்ஞை), மார்புக்குழி (விசுத்தி), தொப்புள் குழி (மணிப்பூரம்), ஆண்/பெண் குறி (சுவாதீஸ்டன்), மலக்குழிக்கு மேல்  (மூலாதாரம்).
 
இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இணைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும். இந்த நேர்கோட்டிற்கு இடப்புறம், வலப்புறமும் உள்ள அவயங்களை இயங்கச்செய்து சுழுமுனையே.
 
இந்த சுழுமுனையே முருகன். இதற்கு இடப்புறமும் வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி, தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம். எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர வேறொன்றும் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்