முருகப்பெருமானை கிருத்திகை நட்சத்திரத்தில் வழிபாடு செய்து கூறவேண்டிய மந்திரம் !!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (13:14 IST)
ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.


முருகப்பெருமானை, அவருக்குரிய கிருத்திகை நட்சத்திர தினத்தன்று வழிபட கூற வேண்டிய மந்திரம் இது.

மந்திரம் :

'ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தந்நோ க்ருத்திக: ப்ரசோதயாத்"

இம்மந்திரத்தை கிருத்திகை நட்சத்திரத்தன்று காலையிலோ அல்லது மாலையிலோ முருகன் கோவிலுக்கு சென்று முருகனுக்கு தீபாராதனை காட்டும் சமயத்தில் இம்மந்திரத்தை 9 அல்லது 27 எண்ணிக்கையில் கூறி வழிபட்டு, அந்த கோவிலில் 9 முறை பிரதட்சணம் வரவேண்டும்.

இப்படி ஒவ்வொரு கிருத்திகை நட்சத்திரத்தன்றும் செய்து வந்தால், அந்த முருகப்பெருமானின் அருள் நமக்கு கிடைத்து, நம் யோகங்களையும் பெற்று நமது எதிர்கால வாழ்வு சிறக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்