பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரியின் சிறப்புக்கள் !!

சனி, 2 ஏப்ரல் 2022 (16:15 IST)
புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்பெறும் நவராத்திரி ‘சாரதா நவராத்திரி’, மாசி மாதத்தில் கொண்டாடப்படும் ‘சியாமளா நவராத்திரி’, ஆடி மாதத்தில் கொண்டாடப் பெறும் ‘ஆஷாட நவராத்திரி’, வசந்த காலத்தில் கொண்டாடப்படும் ‘வசந்த நவராத்திரி’ ஆகியவையாகும்.


புரட்டாசி நவராத்திரியும், பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரியுமே பழக்கத்தில் இருக்கின்றன. வசந்த காலத்தில் பகல் பொழுது அதிகமாக இருப்பதால், வசந்த நவராத்திரி பூஜைகள் பகலிலேயே நடைபெறுகின்றன. வசந்த நவராத்திரியை ‘லலிதா நவராத்திரி’ என்றும் அழைப்பார்கள்.

வசந்த நவராத்திரி என்பது கானகத்தில், கந்த மூலிகைகளைக் கொண்டு செய்யக் கூடியதாகும். இதை ராமபிரான் கானகத்தில் இருந்தபோது, நாரத முனிவர் நடத்தி வைத்ததாக, ராம சரிதம் சொல்கிறது.

புராணத்தில் பங்குனியும், புரட்டாசியும் எமதர்ம ராஜனின் கோரைப்பற்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாத காலங்களும் நோய்க் கிருமிகள் பரவும் காலமாக இருப்பதாகவும், தெய்வ அருள் மனிதருக்குக் கிடைப்பதில் தடை ஏற்படும் காலம் என்றும் சொல்லப்படுகிறது. எனவேதான் இந்த கால கட்டத்தில் அம்பாளை வழிபடும் நவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்க முன்னோர் வலியுறுத்தியுள்ளனர்.

மாதங்கி என்னும் சியாமளா தேவியை முன்னிறுத்தி வழிபாடு செய்வார்கள். அதே போல் வசந்த நவராத்திரியில் உலகை ஆளும் பராசக்தி அன்னையை முன்னிறுத்தி வழிபடுவார்கள்.

ஒரே பராசக்திதான். ஆனால் பல ரூபங்களாக நின்று பக்தர்களுக்கு அன்னை அருள்கிறாள். ஐந்து அடிப்படைத் தொழில்களைச் செய்வதற்காக ஐந்து அம்சங்களா கப் பிரிந்து அருளாட்சி செய்கின்றாள்.

படைக்கும் சக்தி ப்ரம்மரூபிணியான சரஸ்வதியாகவும், காக்கும் சக்தி விஷ்ணு ரூபிணியான லட்சுமியாகவும், அழிக்கும் சக்தி ருத்ர ரூபிணியான துர்க்கையாகவும், மறைக்கும் சக்தி ஈஸ்வரனின் ரூபிணியான ஈஸ்வரியாகவும், அருளும் சக்தி சதாசிவனின் ரூபிணியான பராசக்தியுமாகவும் அருள்பாலிக்கின்றார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்