கார்த்திகை மாதமும் விளக்குகளை ஏற்றுவதில் உள்ள சிறப்புக்களும் !!

Webdunia
சந்தோஷமான தருணங்களிலும், துக்க நேரங்களிலும் விளக்குகளை ஏற்றும் முறைகளை நம் முன்னோர்கள் நமக்கு கூறியுள்ளனர். அதன்படி விளக்கேற்றுவதற்கான நேரம், நோக்கம், திசைகள், முறைகள் போன்ற பல விஷயங்கள் தீபங்களில் அடங்கியுள்ளது.

கார்த்திகை மாதம் நம் வீட்டில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறு, வீட்டில் குடத்தில் எடுத்து வைக்கும் தண்ணீர் உள்ளிட்ட நீரில் மகாவிஷ்ணு வாசம் செய்கிறார் என விஷ்ணு புராணம் கூறுகிறது.
 
கார்த்திகை முதல் நாளில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்பு பெற்றது. இம்மாதத்தில் பூமிக்கு அருகில் சந்திரன் வருவதால், நிலவின் ஒளி மிகவும் பிரகாசமாக இருக்கும். அதனால் தான் எல்லா மாத பௌர்ணமியை விட கார்த்திகை மாத பௌர்ணமிக்கு சிறப்பு அதிகம். மேலும் கார்த்திகை பௌர்ணமியன்று விரதம் இருந்தால் சிவபெருமானும், முருகப்பெருமானும் அருள் புரிவார்கள் என வேதங்கள் கூறுகின்றன.
 
கார்த்திகை மாதத்தில் சூரியன், விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறான். அதனால் தான் இந்த மாதத்தை விருச்சிக மாதம் என அழைப்பதுண்டு.
விஷ்ணுவுக்கும், துளசிக்கும் திருமணம் நடந்தது கார்த்திகை மாதத்தில் தான். இம்மாதத்தில் மகாவிஷ்ணுவை துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
 
நாரதர் கார்த்திகை விரதத்தை 12 ஆண்டுகள் கடைப்பிடித்து, சிவபெருமானை வழிபட்டு, நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லும் சக்தியை பெற்றார்.
 
பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் விளக்கேற்றி வைத்தல் என்பது நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சம்பிரதாயம். ஆன்மிகம் வாயிலாகவும் தீபங்களுக்கு பெரும் முக்கியத்துவம் தரப்படுகிறது. சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்தில் தீபத்திருநாளை நாம் கொண்டாடி வருகிறோம். 
 
நம் பெயர் விளங்க வைக்கும் வாரிசுகளை ‘குலவிளக்கு’ என்றும், வீட்டுக்கு வரும் மரு மகளை வாழ்வில் ‘விளக்கேற்ற வந்தவள்’ என்றும் குறிப்பிடுவதன் மூலம் தீபத்தின் பெருமையை அறியலாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்