ஜூன் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – துலாம்!

Prasanth Karthick
சனி, 1 ஜூன் 2024 (09:56 IST)
கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்  - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக், சூர், குரு - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.


கிரகமாற்றங்கள்:

09-06-2024 அன்று புதன் பகவான்  அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-06-2024 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-06-2024 அன்று சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-06-2024 அன்று புதன் பகவான்  பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

நீதிக்கு முன் அனைவரும் சமம் என்பதற்கேற்ப ஒரு பக்கம் சாதகமாகவும், மறு பக்கம் பாதகமாகவும் நடந்து கொள்ளாமல் ஒரே நிலையை கடைபிடிக்கும் துலா ராசி அன்பர்களே இந்த மாதம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. புதிய பொறுப்புகள் சுமையாக வரும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது.  அலுவலகத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.  எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும்.
மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

சித்திரை:
இந்த மாதம் நக்ஷத்ராதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும்.

ஸ்வாதி:
இந்த மாதம் காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் 

 
விசாகம்:
இந்த மாதம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 5, 6
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்