ஜூன் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கடகம்!

Prasanth Karthick

சனி, 1 ஜூன் 2024 (09:48 IST)
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ - தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய்  - லாப ஸ்தானத்தில் புதன், சுக், சூர், குரு என கிரக நிலைகள் உள்ளன.


கிரகமாற்றங்கள்:
09-06-2024 அன்று புதன் பகவான்  லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-06-2024 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-06-2024 அன்று சூர்ய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-06-2024 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:
என் கடமை பணி செய்து கிடப்பதே என்பது போல பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் எடுத்த காரியங்களை செய்யும்  குணமுடைய  கடக ராசி அன்பர்களே  இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.  வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக  பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன  யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன்  பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள்  உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பிள்ளைகளுடன்  அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

புனர்பூசம்:
இந்த மாதம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். மேலும் இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும்.

பூசம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக  அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

 
ஆயில்யம்:
இந்த மாதம் குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது.    

பரிகாரம்: அபிராமி அந்தாதி துதி பாடி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்