அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்க இதை செய்தாலே போதும்... !!

Webdunia
உலகமானது செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தவத்தை மேற்கொண்ட அம்மன் காமாட்சி அம்மன் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 


இந்த தவத்தை  காமாட்சியம்மன் மேற்கொண்ட சமயத்தில், மற்ற தெய்வங்கள் எல்லாம் காமாட்சி அம்மனிடம் வந்து சேர்ந்து ஐக்கியமாகி தவத்தை மேற்கொண்டதாகவும்  கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக காமாட்சி அம்மனை வழிபட்டாலே, ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும்.
 
* காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம்.
 
* ஒரு சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள், காமாட்சி அம்மனையே குலதெய்வமாக நினைத்துக் கொண்டு, ‘நீயே  என் குல தெய்வமாய் இருந்து என் குலத்தை காப்பாற்று’ என வணங்கியபடி விளக்கேற்றி வழிபடுவார்கள். அதற்கு ‘காமாட்சி தீபம்’ என்று பெயர்.
 
* அனைத்து தெய்வங்களின் அருளையும், ஒன்றாகப் பெறுவதற்காகத்தான், திருமண சமயங்களில் கூட, மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு  வலம் வரச் சொல்கிறார்கள். திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்லும் மணப்பெண், அங்கு முதன் முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கும் இதுதான்  காரணம். அதோடு காமாட்சி விளக்கில் குலதெய்வமும் இருந்து அருள்புரிவதால், முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அவர்களின் குலம் தழைத்து  வளரும் என்பது நம்பிக்கை.
 
* மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று. காமாட்சி விளக்கு புனிதமானது. இதில் கஜலட்சுமியின் உருவமே பொறிக்கப்பட்டிருக்கும். இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. 
 
* பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபட்டு வந்தால் வறுமை விலகும். மணப்பெண்ணுக்கு சீர்வரிசை களை தரும்போது, காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்குவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்