வீட்டிலேயே குலதெய்வ வழிபாட்டினை செய்வது எவ்வாறு...?

Webdunia
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வமும் குலதெய்வம்தான். மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம்.

குலதெய்வங்கள், கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு  என்கின்றன ஞானநூல்கள்.
 
மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட, பெளர்ணமி தினத்தன்று விரதமிருந்து வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும் என்பது  முன்னோர்களின் நம்பிக்கை. மேலும் வருடத்தின் முதல் நாளன்று அதாவது சித்திரைத் திருநாளின் முதல்நாளில், குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்துவர  குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும் என்பது உறுதி.
 
பொதுவாக ஒவ்வொரு மாத பெளர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் பங்குனி பெளர்ணமி, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்துகிற விசேஷமான  நன்னாள். எனவே அன்று குலதெய்வத்தை தேடிச் சென்று வழிபட வேண்டியது மிகமிக அவசியம். மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதை விட பெளர்ணமி  தினத்தன்று வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும். 
 
குலதெய்வக் கோயிலுக்குச் செல்ல முடியாத சூழலில், வீட்டிலேயே குலதெய்வப் படத்தை அலங்கரித்து, உங்கள் வீட்டுக்குப் பாரம்பரியமான முறையில், வழக்கமான வகையில் படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யலாம். பங்குனி மற்றும் சித்திரை மாத பெளர்ணமியிலும் மாதந்தோறும் வருகிற  பெளர்ணமி அன்றும் மறக்காமல் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்