குலதெய்வ வழிபாடு முக்கியமானது என கூறப்படுவது ஏன்...?

குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நாம் நம் குலதெய்வத்தை வழிபடும் போது நமக்கு வரும் வினைகள் யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

குலதெய்வ வழிபாடு என்பது இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடே என்பதினால் தான் "குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை  அவமதிப்பது" என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்பட்டு ஆறு ஜென்மங்களுக்கு தண்டனைக் கிடைக்கின்றது.
 
உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனமுருக வழிபாடு செய்யுங்கள். உங்கள் குலதெய்வத்தின்  அருள் கிடைக்கும்.
 
குலதெய்வத்தை மறப்பது பெற்றோரை மறப்பது போன்றது. எவன் ஒருவன் இப்படி தான் வணங்கி வந்த குலதெய்வத்தை உதாசீனப்படுத்துவார்களோ அவர்கள் தனது பெற்ற தாயாரையே உதாசீனப்படுத்தியது போலாகும். 
 
குலதெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பல தெய்வங்களை வழிபாடு செய்து வரலாம். ஆனால் அந்த தெய்வங்கள், குலதெய்வங்கள் ஆகாது.
 
இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்ததுதான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும். நாம் வணங்கும் இஷ்ட  தெய்வம் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்