பஞ்சமி திதியில் விரதம் இருந்து வழிபாடு செய்வது எப்படி...?

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (18:02 IST)
வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என இரண்டு முறை வரும் பஞ்சமி திதியிலும் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை படைப்பது மிக விசேஷம்.


நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து மகிழ்ந்து அருள் தருவாள். மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் சிறப்பு.

சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போன்று, நம் வாழ்வில் இன்பத்தையும், நிம்மதியையும் சேர்த்துக் கொடுத்திடுவாள்.

மிளகும், சீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய், லவங்கம், பச்சைக்கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை நைவேத்தியமாகச் செய்து தேவியை வணங்கலாம்.


மந்திரம்:

ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ

பலன்கள்:

பஞ்சமி திதியில் வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எதிரிகள் மற்றும் எதிர்ப்புகளையெல்லாம் இல்லாமல் செய்திடுவாள். தீயசக்திகளை அடித்து விரட்டிடுவாள். காரியம் அனைத்திலும் துணையிருப்பாள்.

செயலில் பலமும், பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம். ஏவல், பில்லி, சூனியம் போன்றவையால் பாதிப்புகள் ஏற்படாது. குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். கடன் தொல்லை, வறுமை ஒழியும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்