இன்றைய தினம் விரதம் இருந்து சக்தியையும் கணபதியை யும் சேர்த்து வணங்கினால் உடல் ஆரோக்கியம் பெருகும். வலுவிலந்தவர்கள் நல்ல உடல்பலத்தை பெறுவார்கள். தாயும் குழந்தையும் நலம் பெறுவார்கள். பிள்ளைபாசம், தாய் பாசம் பெருகும்.
சதுர்த்தி திதி என்பது விநாயகருக்கு உரிய அற்புதமான நாள். இந்தநாளில், ஆலயங்களில் உள்ள விநாயகருக்கு, சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும். இதேபோல், பிள்ளையாருக்கு வீட்டில் இருந்தபடியே பூஜைகள் செய்யலாம்.