முருகப்பெருமானுக்கு ஏற்ற கந்தசஷ்டி விரதத்தை எவ்வாறு அனுஷ்டிப்பது...?

Webdunia
இந்த ஆண்டு கந்தசஷ்டி விரதம் 9/11/2021 அன்று வருகிறது. அதற்கான விரதம்தான் நேற்று (4/11/2021) முதல் ஆரம்பமாகிறது. இன்றிலிருந்து 6-வதுநாள் முருகப்பெருமான் ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும்.

இந்த சஷ்டி விரதம் திருச்செந்தூர் கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளான 2வது படை வீட்டில்  சிறப்பாக டைபெறும். இந்த விரதம் இருப்பவர்கள் குழந்தை வரம் வேண்டி முருகனை நினைத்து விரதமிருக்க முருகனே குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகம்.
 
இந்த சஷ்டி விரதம் வீட்டில் அல்லது கோயிலில் இருக்கலாம். முடிந்த வரை முருகன் கோயிலில் இருப்பது விசேஷமானது. அதுவும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.
 
வீட்டில் விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்து முடித்து முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலையத்திற்கு சென்று வரலாம். வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம் கந்த சஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம்.
 
ஒரு சிலர் ஆறு நாட்கள் விரதம் இருந்து, இந்த கந்தசஷ்டியை அனுஷ்டிப்பார்கள். ஆறு நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள், கந்தசஷ்டி தினத்தன்று ஒரு நாள் மட்டுமாவது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்