கேதார கௌரி விரதத்தினை மன ஒருமைப்பாட்டுடனும், புனித நோக்குடனும் என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்களோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும்.
எத்தனை நாள் விரதம்: அம்பிகை தவ நிலையில் இருந்த விரதம் இது, அவர் இறைவனின் உடம்பில் பாதியை அன்னை பெற்ற விரதம் இது. இந்த விரதம் இருப்பவர்கள் 21 முடிச்சுகள் கொண்ட காப்பை அணிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு திதிக்கும் ஒரு முடிச்சு என போடுவார்கள். இப்போது 21 நாட்கள் பலரால் விரதம் இருக்க முடிவதில்லை. 3 நாட்கள், ஏழு நாட்கள், ஏன் ஒரு நாள் கூட சிலர் விரதம் இருந்து பூஜை செய்கின்றனர்.