எந்தெந்த கடவுளை எத்தனைமுறை சுற்றிவந்து வணங்கவேண்டும்...?

Webdunia
பிரகார வலம் எப்போதும் இடமிருந்து வலமாக வரவேண்டும். ஒவ்வொரு கடவளுக்கும் இத்தனைமுறைத்தான் வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.

* அரச மரத்தை சுற்றும்போது ஏழுமுறை வலம் வரவேண்டும். மேலும் அதிகாலையில், தம்பதியராக சுற்றுவதால் நல்ல பலன் கிடைக்கும். சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது.
 
* விநாயகரை ஒரு முறை வலம் வரவேண்டும்.
 
* ஈஸ்வரனையும், அம்பாளையும் மூன்று முறை வலம் வரவேண்டும்.
 
* சூரியனை இரண்டுமுறை வலம் வரவேண்டும்.
 
* நவக்கிரகங்களை ஒன்பது முறை வலம் வரவேண்டும்.
 
* மகான்களின் சமாதியை நான்கு முறை வலம் வரவேண்டும்.
 
* தோஷ நிவர்த்தியாக பெருமாளையும், தாயரையும் நான்கு முறை வலம் வரவேண்டும். கோவிலில் உள்ள ஆலய பலிபீடம், கொடிமரம் முன்புதான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.
 
* பெருமாள் கோவிலில் நான்கு முறை வலம்வர வேண்டும்.
 
* ஆண்கள் அஷ்டாங்கப் பணிவு (சாஷ்டாங்கமாக) என்ற முறையிலும், பெண்கள் பஞ்சாங்கப்பணிவு (குணிந்து) என்ற முறையிலும் விழுந்து வணங்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்