ஆடிக்கிருத்திகை நாளில் விரதம் இருக்கும் முறைகள்...!!

கிழமைகளில் செவ்வாயும், திதிகளில் சஷ்டியும், நடத்திரங்களில் கிருத்திகையும் முருகனுக்கு உகந்தது. மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வரும்.

அன்றைய தினம் அனைத்து கோவில்களிலும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பெரும்பான்மையோர் விரதமிருந்து அவரவர் இல்லத்தில் கிருத்திகை  வழிபாடும் நடக்கும். இவ்வாறு மாதந்தோறும் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் வருடத்திற்கு மூன்று கிருத்திகை தினத்தில் விரதமிருந்து வழிபாடு செய்வர். 

இப்படி மூன்று கிருத்திகை தினத்தில் விரதமிருந்து முருகனை வணங்குபவர்களுக்கு, வருடத்தின் அனைத்து கிருத்திகைகளிலும் விரதமிருந்து வழிபட்ட பலன்  கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
ஆடிக் கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை, தைக் கிருத்திகை என மூன்று கிருத்திகைகளே முக்கோடி கிருத்திகை என அழைக்கப்படும். தட்சிணாயன துவக்கமான  ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக  இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.
 
கிருத்திகை விரதமிருப்பவர் அதிகாலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, வீட்டை தூய்மைப்படுத்தி காலை உணவெதும் உட்கொள்ளாமல் மதியம் உப்பில்லா உணவை முருகனுக்கு படைத்து அதை உண்டு, இரவு பால் பழத்தோடு விரதத்தை முடிக்க வேண்டும். ஆடிக்கிருத்திகை நாளில் விருதமிருந்து வழிபடுவோருக்கு முன் ஜென்ம வினைகள் யாவும் தீரும்.
 
அன்றைய தினம் கந்தர் சஷ்டி, கந்தர் அலங்காரம், திருப்புகழ் ஆகியவற்றை இறைசிந்தனையோடு பாராயணம் செய்து, மறுநாள் ரோகிணியன்று விரதத்தை நிறைவு  செய்ய வேண்டும். காவடி பிரியனான முருகனுக்கு நேர்த்திக்கடனாய் காவடி எடுப்பதும், முடிக்காணிக்கையும் ஆடிக்கிருத்திகையில் நிகழும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்