சிவராத்திரி நாளில் உள்ள விஷேசங்கள் என்ன தெரியுமா...?

Webdunia
பார்வதிதேவி ஒருநாள் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினாள். ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கி உயிர்கள் வருந்தின. அந்நாளே மகாசிவராத்திரி என்று கூறுவர். 

திரயோதசியன்று மாலையில் சிவபெருமான் பிரதோஷ நடனம் ஆடினார். அன்றிரவு தேவர்கள் பாற்கடலை கடைந்து பெற்ற விஷத்தை சிவபெருமானுக்கு  அர்ப்பணித்தனர். 
 
சிவபெருமான் நஞ்சையும் விரும்பி உண்டு தேவர்களைக் காத்தார். விஷத்தைக் குடித்ததால் மயக்கமடைந்தார். அன்றிரவு சிவபெருமானைத் துதித்து தேவர்கள் யாவரும் வணங்கி நின்றனர். அந்நாளே சிவராத்திரி. 
 
மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க எமன் விரைந்து வந்தான். உயிரைக் காத்துக் கொள்ள அவன் சிவலிங்கத்தை ஆரத்தழுவிக் கொண்டான். ஆனாலும், தர்மவானான எமதர்மன் பாசக்கயிற்றை வீசினான். கயிறு லிங்கத்தையும் பற்றிக் கொண்டது. 
 
சிவபெருமான் எமனை காலால்உதைத்தார். அதன்பின், தேவர்கள் சிவனை வேண்டி எமனை உயிர்ப்பித்தனர். அந்நாளே மகாசிவராத்திரி என்று கூறுவர். அதனால், மகாசிவராத்திரி நாளில் சிவனை வழிபட்டோருக்கு மரணபயம் நீங்கும் என்பது ஐதீகம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்