சிவபெருமானின் சிறப்புக்களை பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

சைவ சித்தாந்தத்தில் பரம்பொருளைக் குறிக்கவும் சிவம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. 'சிவம்' என்றால் எல்லா உயிர்களுக்கும் நன்மை பயக்கின்ற ஒளி  எனப்படும். 

சிவம் என்பது இயற்கையாய் எங்கும் நீக்கமன்றி இருக்கின்ற ஒரு மெய் பொருள்நிலை ஆகும். சிவன் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத  பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். 
 
சிவன் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கி, பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்கள்.
 
தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை  உருவாக்கினார்.
 
அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார். கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார்.
 
சிவனின் இடப்புறத்திலிருந்து விஷ்ணுவும், வலப்புறத்திலிருந்து பிரம்மரும் உருவானார்கள் என்று திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வேதவியாசர்  கூறுகின்றார்.
 
பிரம்மன் தன்னால் படைக்கப்பெற்ற உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டி நிற்க பிரம்மரின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் உதித்தார்  என்று வாயு புராணம் கூறுகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்