கார்த்திகை விழா குறித்து கூறப்படும் முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா...?

Webdunia
கார்த்திகை விழா குறித்து புராணங்கள் பல்வித காரணங்களைச் சொன்னாலும் மூன்று காரணங்கள் முக்கியமாக போற்றப் பெறுகின்றன.

மலையாய் அமர்ந்த மகாதேவன். அடி - முடிகாண முடியா வண்ணம் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் காட்சித்தந்து அவர்கள் அறியாமையை நீக்கி சிவபொருமான் நெருப்பு ஜோதியாய் காட்சித் தந்து அண்ணாமலையாக அருள்பாலித்த திருநாள் திருக்கார்த்திகை திருநாள் ஆகும்.
 
தீப்பொறியாய் உதித்த சரவணன். ஈசனின் ஆறுமுகங்களிலிருந்து தீப்பொறியாய் உதித்த சண்முகக்கடவுளை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். 
அவர்களுக்குரிய கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனை கார்த்திகேயனாக வழிபட நற்பேறுகள் யாவும் கிடைக்கும் என்பது முருகப்பெருமான் தந்தருளிய வரம். அதன்படி இந்நாள் கார்த்திகேயக் கடவுளுக்குரிய நாளாகவும் போற்றப்பெறுகிறது.
 
தீபமாக நின்ற திருமால் ஒருமுறை கலைவாணிக்கு தெரியாமல் பிரம்மன் யாகம் ஒன்று நடத்தினான். இதனால் சினந்த சரஸ்வதி யாகத்தை அழிக்க மாய நலன் என்ற அசுரனை ஏவினாள். அவன் யாகத்தை தடுக்கும் பொருட்டு உலகம் முழுமையும் இருட்டாக்கினான். உடன் பிரம்மன் திருமாலை வேண்டி நிற்க, பகவான் ஜோதியாய் ஒளிர்ந்து இருளை விரட்டி யாகத்தை காத்தருளினார். இப்படி ஜோதியாய் தோன்றிய விஷ்ணுவை தீப உருவில் வணங்குவர் வைணவர்கள்.
 
திருக்கார்த்திகையன்று குறிப்பிட்ட நியதிகளோடு, தீபங்கள் ஏற்றி கார்த்திகை தெய்வங்களை வழிபடுவதால் நம் வாழ்விலும் துன்ப இருளகன்று இன்பவொளி பிறக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்