திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு
திங்கள், 15 நவம்பர் 2021 (21:30 IST)
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நவம்பர் 19 ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நவம்பர் 19 ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.