சிவனுக்கு பிடித்த சில பொருட்களை வைத்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்!!

Webdunia
சிவபெருமானின் நெற்றிக்கண்ணின் கோபப்பார்வையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. அதேசமயம் சிவபெருமானை குளிரிவிப்பதும் மிகவும் எளிமையானதாகும். சில பொருட்கள் சிவபெருமானுக்கு மிகவும் பிடிக்கும், அவற்றை வைத்து வணங்கும்போது சிவபெருமான் குளிர்ந்து  வேண்டுவதை அருளுவார்.
பால்: பால் அனைத்து கடவுள்களுக்கும் படைக்கப்படும் ஒரு பொருளாகும். சிவபெருமானும் பாலை அதிகம் விரும்புவார். முடிந்தளவு  சுத்தமான பாலை சிவபெருமானுக்கு படைக்க முயலுங்கள். கடைகளில் விற்கும் செயற்கை இராசயனங்களால் தயாரிக்கப்பட்ட பாலை  சிவபெருமானுக்கு படைப்பது உங்களுக்கு எந்த பலனையும் தராது.
 
சந்தனம்: இயற்கையிலேயே கோபக்கார கடவுளாக அறியப்படுகிறார். இந்த சூழ்நிலையில் அரைத்த சந்தனம் சிவபெருமானின் கோபத்தை  குறைத்து அவரை குளிர்ச்சியடைய செய்யும் என புராணங்கள் கூறுகிறது.
 
விபூதி: சிவபெருமான் மிகவும் எளிமையான கடவுள் ஆவார். மற்ற கடவுள்களுக்கு படைப்பதை போன்ற பொருட்கள் சிவபெருமானுக்கு தேவையில்லை. எனவே சிவலிங்கத்தை சுத்தமான பாலில் அபிஷேகம் செய்து திருநீரால் மூன்று பட்டையிட்டு வணங்கினாலே போதும்  சிவபெருமானின் அன்பை பெற்றுவிடலாம்.
 
வில்வம்: நீங்கள் சிவபெருமானை வழிபட எத்தனை இலட்சங்கள் செலவு செய்தாலும் அவை அனைத்தும் சிறிது வில்வ இலைகளை வைத்து  வழிபடுவதற்கு ஈடாகாது. அதிலும் சிவனின் திரிசூலம் வடிவில் இருக்கும் மூன்று வில்வ இலைகளை சிவபெருமானுக்கு படைத்தால் கூடுதல்  அருள் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்