அந்நாளில் திருவரங்கத்திற்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையில் காவிரியாறு கரைபுரண்டோடிக் கொண்டிருக்கையில், நிறைமாத கர்ப்பிணியான தன் மகளை திருவரங்கத்தில் விட்டு விட்டுத் திருச்சிக்கு வந்த ஒரு தாயால், காவிரியின் வெள்ளம் காரணமாக திரும்பச் செல்ல இயலாதபோது இறைவனே அத்தாய் வடிவில் அவள் மகளுக்கு மகப்பேறு செய்வித்து தாயையும் சேயையும் காத்தருளினார் சிவபெருமான்.
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் இந்த சுலோகத்தை சொல்லி வணங்குவதால், சிவனே தாயுமானவனாக இருந்து காத்தருள்வார் என்றும் கூறப்படுகிறது. இந்த சுலோகத்தை கர்ப்பமாய் இருக்கும் பெண்கள், தினமும் மூன்றுமுறை சொல்லி இறைவன் சிவனை வழிபட்டால், அவர்களுக்கு பிரசவத்தில் எந்த பிரச்சனையுமின்றி சுகப்பிரசவம் நிகழும்.