தை வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாட்டு பலன்கள் !!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (17:35 IST)
உத்திராண்ய காலத்தின் ஆரம்ப மாதமான தையில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினங்களில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.


தை மாத வெள்ளிக் கிழமைகளில் வீட்டுக்கருகிலிருக்கும் கோயிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்யலாம். முடிந்தால், செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள். செவ்வரளி மாலை சார்த்தலாம்.

வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோயிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கியருளும் என்பார்கள்.

எனவே  வெள்ளிக்கிழமை, அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளலாம். துர்க்கை சந்நிதியில் நெய்  தீபமேற்றி வழிபாடு செய்யலாம்.

வீட்டிலுள்ள திருஷ்டி, எதிர்மறையான எண்ணங்கள் முதலானவை நீங்கும். மங்கல காரியங்களை விரைவில் நடத்தித் தருவாள் அன்னை பராசக்தி.

தை முதல் வெள்ளி தொடங்கி, அடுத்தடுத்த தை வெள்ளியிலும் அம்மன் தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். கூடவே, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஒவ்வொரு வாரமும் ஏதேனும் பிரசாதம் வழங்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்