தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாதத்தில் மக்கள் தைப்பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, தை வெள்ளி வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில் பின்பற்றுகின்றனர்.
முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்கு தைப்பூச நாளில் ஆலயம் சென்று வழிபாட்டால் போதும். காவடி எடுத்தல், அலகு குத்துதல், உள்ளிட்ட வேண்டுதல் இருந்தால் நிறைவேற்றலாம்.
தீராத நோய் ஏற்பட்டு அவதிப்படுவோர், முருகனுக்கு பால் காவடி எடுக்க நோய் தீரும் என்பது ஐதீகம். பால் காவடி என்பதும் பால் குடம் என்ப தும் ஒன்று தான். மறக்காமல் தடைப்பட்டு வரும் திருமண பேச்சை தொடங்க பூசம் நாள் சிறந்தது.