பிரதோஷ வேளையில் வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் !!

Webdunia
செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.

 
செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும். பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடைய வரக இருந்தாலும், ஒரு செவ்வாய் வரும் கெடு பலன் நீங்கும். பித்ரு தோஷம் நீங்கு ம். கடன் தொல்லை தீரும்.
 
எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமா வது வைதீஸ்வரன் கோவில் சென்று சித் தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்தி லே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவ ர்களுக்கு வரும் ருனமும் ரணமும் நீங்கும்.
 
சிவபெருமானை வணங்க செல்பவர்கள் இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் பிரதோஷ வேளையில், கருவறை ஈசனை நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே தரிசிக்க வேண்டும்.
 
அங்கேதான் தேவர்களுக்கு சந்தியா நிருத்தத்தை ஈசன்  ஆடிக்காட்டியருளினார். பிரதோஷ வேளையில் நீலகண்ட பதிகத்தை யும் பாராயணம் செய்வது விசேஷம்.
 
பிரதோஷ வேளையில் ஈசன் ரிஷபத்தின் மீது ஆலயவலம் வரும்போது, மூன்றாவது சுற்றில் ஈசான (வடகிழக்கு) திக்கில் நடை பெறும் வழிபாட்டை தரிசிப்பது சிறப்பான புண்ணியம் தரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்