கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ள சில செயல்களுக்கான நன்மைகள்...!!

Webdunia
ஒரு கன்னிகையை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர். 16 பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் வாழ்வார்.

பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள். நீர் நிலைகளை சீர்திருத்துபவரும், உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம்  வாழ்வார்கள்.
 
பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார். புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்.
 
தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார். பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர்  இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.
 
தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார். சுவையான பழங்களைத் தானம்  கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.
 
ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும். அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள்  பரமபத்திலிருப்பர்.
 
விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர். சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும்  செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்