சாம்பிராணி தூபம் போடுவதால் உண்டாகும் பலன்கள் !!

Webdunia
சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு  உண்டாகும்.

சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருக்கும். சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம்  கிடைக்கும்.
 
சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும். சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி  உண்டாகும்.
 
சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை  விலகும்.
 
சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும். சாம்பிராணியில் ஜவ்வாதி போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்