ஸ்ரீராம நவமி நாளில் ஸ்ரீராமர் கோயில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயில்களுக்கும் சென்று, ஸ்வாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும் ஸ்ரீராமபிரானை எண்ணிக் கொண்டு ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.
பகவான் மானிடராக அவதரித்தது மொத்தம் மூன்று முறை. வாமனர், ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர். இவற்றில் ஸ்ரீராம அவதாரம் தவிர மற்ற இரு அவதாரங்களிலும் தனது கடவுள் தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் பகவான். எப்படி மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் ஸ்ரீமஹா விஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரமே இது.