செல்வ வளம் பெருகிட சுலபமான சில பரிகாரங்கள் !!

Webdunia
வெள்ளிக்கிழமைதோறும் மாலை 6 மணிக்குள் ஏதாவது ஒரு பசுமாட்டிற்கு 6 மொந்தன் பழம் கொடுத்துக்கொண்டே வரலாம். இதனாலும் நம்முடைய பணக்கஷ்டம்  தீரும்.

செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது; அப்படி வீசினால், பண வரவு குறைந்து கொண்டே இருக்கும். செல்வச் செழிப்போடு  வாழ, நமது வீட்டில் நமது ஆடைகள், துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.
 
நமது வீட்டிற்குள் நுழைந்ததும், எப்போதும் நறுமணம் வீச வேண்டும். அப்படி இருந்தால், செல்வம் சேரத்துவங்கும். எங்கோ போக வேண்டிய பணம், நமது வீட்டை நோக்கி வரும். அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.
 
பிரதி வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும். அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில்  நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும். அதன் பிறகு, 100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
 
ஒருபோதும் இருட்டிய பின்னர், தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.
 
மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும். ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும் என்பது அனுபவ உண்மை.
 
தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து, பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;  வராக்கடன் வசூலாகும். பணம் மிச்சமாகும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்