நெல்லை சங்கரன்கோவில் திருத்தலத்தில் கொண்டாடப்படும் ஆடித்தபசு... !!

ஹரியும் அரனும் ஒன்றே என உலகுக்கு உணர்த்த விரும்பிய கோமதியம்மன் இறைவனை வேண்டி ஒற்றைக் காலில் தவமிருந்தாள்.


அன்னையில் தவத்தில்  மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார். இந்த வைபவமே ஆடித்தபசு திருவிழாவாக ஆண்டுதோறும் சங்கரன் கோவிலில் கொண்டாடப்படுகிறது.
 
முன்னொரு காலத்தில் சிவனும் விஷ்ணுவும் ஒன்றாயிருந்த காட்சியைத் தனக்கு காட்டு மாறு சிவனிடம் பார்வதி தேவி கேட்டார். அவ்வுருவைக் காணவேண்டுமானால் பார்வதி தேவி தவம் செய்ய வேண்டும் என்றார் சிவபெருமான்.
 
புன்னை வனத்தில் கடும் தவம் செய்த அன்னைக்கு ஆடி மாதம் பெளர்ணமியன்று இடப்பாகம் சிவனாகவும் வலது பாகம் நாராயணனாகவும் காட்சி அளித்தார் சிவபெருமான். பார்வதி தேவி மீண்டும் சிவனாக உருக்காட்டுமாறு வேண்ட அவ்வாறே சிவரூபம் மட்டும் காட்டி நின்றார் சிவன்.
 
இந்த இரு நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் நிகழ்ந்ததால் ஆடித் தபசு என்ற விழாவன்று சிவன் மாலையில் சங்கர நாராயணனாகக் காட்சி அளிக்கும் வைபவமும் பின்னர் சிவனாகக் காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
 
சிவனும் விஷ்ணுவும் சங்கர நாராயணனாகத் தோன்றியது போலவே இடப்புறம் பார்வதியும் வலப்புறம் மகாலட்சுமியுமாகசங்கரன்கோவில் திருக்கோவிலில் காட்சி  அளிக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்