காம உணர்வை தூண்டும் உணவுகள்

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2017 (19:53 IST)
காம உணர்வு கனவன் - மனைவி இடையே இருக்கும் தாம்பத்யத்தை அதிகரிக்கும் உணர்வாகும். குறிப்பிட்ட இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் காம உணர்வு அதிகரிக்கும்.


 

 
ஒயின் அருத்துவதால் ஆண், பெண் இருபாலருக்கும் காம உணர்வு தூண்டப்படுகிறது. ஒயினில் உள்ள வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் ஆகியவை செக்ஸ் ஹார்மோன்களை உடலில் அதிக அளவில் சுரக்கச் செய்கிறது.
 
பூண்டு சாப்பிட்டால் ஆண்களுக்கு விரைப்புத் தன்மை பிரச்னை இருக்காது. பூண்டில் இரத்த ஓட்டத்திற்கு உதவும் அல்லிசின் என்ற பொருள் உள்ளது. 
 
வாழைப்பழத்தில் உள்ள புரோமிலெய்ன் என்னும் பொருள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க செய்யும். வாழைப்பழத்தில் அதிக அளவு சர்க்கரை அடங்கியுள்ளதால் காம உணர்வை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடலில் அதிகம் சுரக்கச் செய்யும்.
 
அவ்கோடா என்ற பழம் ஆண், பெண் இருவருக்கும் பாலுணர்வை தூண்டும். 
 
சாக்லெட்டில் உள்ள வேதிப்பெருட்கள் உணர்ச்சிப் பெருக்கினை அதிகரிக்கின்றன.
 
மிளகாயின் காரத்தன்மையினால் உடலினை சூடேற்றி, இது காமப்பெருக்கியாகக் கருதப்படுகிறது. குடைமிளகாயிலிருந்து, சிகப்பு மிளகாய் வரை அனைத்துமே காமப்பெருக்கிகள் தான். மிளகாய் உடலை மிகவும் உணர்ச்சி ததும்பும் அளவுக்கு மாற்றுகிறது.
அடுத்த கட்டுரையில்