பதக்க மேடையில் காதலை கூறிய சக வீரர் : ஒலிம்பிக் போட்டியில் சுவாரஸ்யம்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (10:33 IST)
தற்போது நடைபெற்று வரும் 2016ஆம் ஆண்டிற்கான ரியோ ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு வெற்றி, தோல்விகள் ஒரு புறம் இருந்தாலும் மறுபக்கம் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.


 

 
சக போட்டியாளர் மீது, தனக்குள்ள காதலை வெளிப்படுத்துவதற்கும் ஒலிம்பிக் போட்டியை சில விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில்தான், பிரேசில் நாட்டை சேர்ந்த ஓரின சேர்க்கை ஜோடி ஒன்று இப்படி காதலை மைதானத்தில் அறிவித்து பரபரப்பை கிளப்பியது.
 
அதேபோல், ஒலிம்பிக் போட்டியில் டைவிங் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற சீன வீராங்கனை ஹி ஹி, பதக்கத்தை வாங்குவதற்காக மேடையில் நின்று கொண்டிருந்த போது, அவரின் நீண்ட கால நண்பரும், சக வீரருமான கின் காய் தனது காதலி ஹிஜியிடம் தெரிவித்தார்.


 

 
அதாவது, அவர் முன் மண்டியிட்டு, அவருக்கென வாங்கிய மோதிரத்தை, அவரிடம் நீட்டி தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்வாயா என்று கேட்டார். இதில் இன்ப அதிர்ச்சி அடைந்த ஹிஜி கண்ணீர் மல்க, வெட்கத்துடன் தலை அசைத்து தன்னுடை சம்மதத்தை தெரிவிக்க அரங்கமே அதிர்ந்தது. அதன்பின் கின் காய், அவருக்கு அந்த மோதிரத்தை அணிவித்தார்.
அடுத்த கட்டுரையில்