ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (15:37 IST)
கரூரில் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது


இந்தியா முழுவதும் தொழில் விருத்திக்கடவுளான ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா இன்று (17-09-18) நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா மூலவருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களினால் அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மாவின் அருள் பெற்றனர்.

சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்